வங்க கடலும், மாம்பழ சாரும்
முக்யமான விஷயத்த மறந்துட்டேன் போன போஸ்ட் போட்டப்போ . ரெண்டு வாரம் முன்னாடி சென்னை போயிருந்தப்போ தனியா பீச்கு போயிருந்தேன். அது ஒரு செம experience . வானத்ல சோகமே உருவா ஒரு அர குற நிலா, சண்டேந்கர்துனால பீச் fulla மக்கள் கூட்டம். தாகமா இருந்துச்சு நு ஒரு maaza பாட்டில் வாங்கிகிட்டு போய் கடலோரம உக்காந்தேன். கடல் மெல்ல மெல்ல வெட்கம் போய் என் பக்கத்ல வந்து அலை அடிச்சுது. கால் நனைச்சு என்ன கூப்டுச்சு என் கூட வந்துடு நு. எந்த ஒரு எடத்ல இயற்கை தன்னோட முழூ அழகோடும் பிராமண்டதொடும் இருக்கோ, அங்கெல்லாம் ஒரு அழைப்பு இருக்கு. என் கூட சேர்ந்துடு நு. அது நால தானோ என்னவோ, ஒரு மலையோட உச்சத்ளையும் சேரி , கடலோட அலைளையும் சேரி, ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு. ஏதோ புரியாத ஒரு தாகத்த உண்டு பண்ணுது. தெரியாத ஒரு ஆசை, அந்த ஆசையின் நிறைவு அப்டி இயற்கையோட கலந்துடர்துல தான் இருக்கு நு தோணும் அப்போலாம். இத நீங்களும் உணர்துர்கலம் . நெறையா பேர் விளையாட்ட சொல்லுவாங்க, ரொம்ப அழகான இடங்களுக்கு போய் பாக்கும்போது இங்கயே உயிர் போனா கூட சந்தோஷம் தான்னு (இதையே சில பசங்க வேற ஒரு விஷயத்ள சொல்லுவாங்க – “மச்சி அவளோட ஒரு நாள் இருந்தா போதும் அதுக்கப்றோம் சேத்தா கூட பரவா இல்ல” – பெண்ணும் இயைற்கையின் அந்த ஈர்ப்பு சக்தி உச்சியில் இருக்கும் ஒரு பொருள் தான் (Feminists excuse – நோ offence )). அப்டி ஒரு ஈர்ப்பு சக்தி அந்த வங்க கடலுக்கும் நெறைய வே இருக்கு.
வந்திர்த்த கூட்டத்ல எவ்ளோ விதமான பேர். சிலர் friends கூட வந்துர்ந்தாங்க. சிலர் family கூட. பலர் ஜோடி ஜோடியா வந்துர்ந்தாங்க – அதுலயும் எவ்ளோவோ விதம் – சிலர் வெட்க பட்டுகிட்டு விரலோட விரல் கோர்த்து நடந்தாங்க. சிலர் ஓர கண்ணால ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்டு, கடல் அலையோட சந்கீதத்ள அப்டியே லயிசுட்டாங்க. (இவளவும் எனக்கு எப்டி தெரியும்னு கேக்காதீங்க.. வேடிக்க பாக்கறதுla நம்மலாம் expert) . இன்னும் சிலர் கூட்டிட்டு வந்த பொண்ண இடுப்போட சேர்த்து கட்டிகிட்டே நடந்தாங்க, அத பார்த்த சிலர் ‘culture ‘ எப்டி கெடுக்கராங்க பாரு இவங்கன்னு சொல்ற மாறி மூஞ்சிய கோவமா வெச்சுகிட்டு அவங்களையே உத்து பாத்தாங்க. இன்னும் அங்க கடலை விக்கற பசங்க, பிச்சை எடுக்கற கேளவி , ஜோசியம் சொல்றேன்னு நச்சரிக்கற ஒரு பொம்பள , சொன் பப்டி விக்கற வண்டி அதுல மாட்டிர்கர மணி சத்தம், வர கொஞ்ச நஞ்சகாத்துல பட்டம் விட்டுற்றுகர பொடியங்க, பல்லூன் சுடர சத்தம், ஏதோ சோகத்துல கடலையே வெருச்சு பாக்கற சில பேர் – இதுக்கு நடுல அந்த maaza ல இருந்த மாம்பழ ரசம் , ரொம்ப ஒரு நல்ல அனுபவமா இருந்துது. கொஞ்சம் அலைகள் படர எடத்துல பொய் ஆச தீர நனைஞ்சேன்.
இவ்ளோ மக்கள் – அவங்களோட ஆசைகள் காதல்கள் கண்ணீர்கள் புன்னகைகள் புண்கள் புதிர்கள் புண்ணியங்கள் சோகங்கள் தாபங்கள் ஏக்கங்கள் எண்ணங்கள் இவள்வேயும் அந்த கடல் உள்வாங்கிகிட்டு தான் இப்டி கொந்தளிக்கிதோ நு தோணிச்சு. கடல் இல்லாத ஊர் ல இருக்கவே கூடாது நு கூட தோணிச்சு. இயற்கையின் அழகின் உச்சகட்டம் இந்த கடல்களும் மலைகளும் தான்.
எனக்கு ஒரு ஆசை – ரொம்ப பெரிய விஷயம்லாம் இல்ல. நடு கடல்ல போய், நிலமே தெரியாத இடத்துல கொஞ்ச நாள் இருக்கணும். அந்த நீல நிற உலகம் எப்டி இருக்கும் நு பார்க்கணும். கரைலேயே இவ்ளோ seductive a இருக்கற அந்த கடல் , நுடுல இன்னும் எவ்ளோ ஈர்போட இருக்கும் .
travel சில பேர்க்கு பிடிக்கும். நானும் எவ்ளோ தான் journey பத்தி அலுதடுகிட்டாலும் அப்டி இந்த பரண்ட பூமில ஒரு எடத்லேர்ந்து இன்னொரு இடம் போகும் பொது ஒரு பிரமிப்பு ஏற்படுது – ஆகா எவ்ளோ பெரிசு இந்த உலகம். இதபார்க்காம நம்ம வீடு வீதின்னு வாழ்க முழுசா இருக்கறவங்க எவ்ளவு பேர். ஆனா திரும்பி பஸ் காக வந்து காதுற்றுக்கற போ அதே கடல் நீர் தந்த பரிசான அந்த ஈர மணல் பிசு பிசு நு ஓட்ட ஒரு irritation – திரும்பி normal mood கு வந்துட்டோம் நு உணர்தித்து. வங்க கன்னிக்கு எந்தன் வணக்கங்கள்.

Siva perumal kannulla irunthu vara thee pori mathiri, corn vikkira thallu vandiya vittuta!!! Nice post..